மகளை அணைக்கவிடாத கொரோனா.. காற்றில் அன்பை அனுப்பிய சீனத் தாய்: நெகிழ்ச்சி வீடியோ

செங் ஷிவென்

 • Share this:
  சீனாவின் ஹெனான் மாகாணத்து மருத்துவமனையில், கொரோனா பாதிப்புடைய மக்களைப் பராமரிக்கும் செவிலியருக்கும் அவரின் மகளுக்கும் இடையிலான நெகிழ்ச்சியான காட்சி பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

  சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கி தற்போது பல்வேறு நாடுகளில் பரவிவரும் கொரோனா வைரஸால் கிட்டத்தட்ட 400 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து இந்த நோய் மற்றவர்களுக்கு எளிதாக காற்றின் மூலம் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பிருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

  சீனாவில், ஹெனான் மாகாண மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் செவிலியர் லியு ஹையனுக்கும், மருத்துவமனைக்கு அவரைக் காண வந்த அவரது 9 வயது மகள் செங் ஷிவென் இடையிலான நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று வெளியாகி, சமுக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டுவருகிறது. செவிலியரும் அவரது மகளும் தொலைவில் நின்று காற்றின் மூலமாகவே கண்ணீருடன் அணைப்பைப் பகிர்கிறார்கள்.

  இறுதியில், தன் தாய்க்காக கொண்டு வந்த உணவை ஓர் இடத்தில் வைக்கிறார் செங் ஷிவென். தாய் லியு அதை எடுத்துக்கொள்கிறார்.  அழும் சிறு மகள் காற்றிலேயே அணைக்கும் செவிலியரின் உறுதியும், கடமையை நோக்கி அவர் வேகமாக மருத்துவமனை திரும்புவதும், அவசர காலத்தில் அந்நாட்டவரின் மன உறுதியையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

  Also See...
  Published by:Gunavathy
  First published: