CoronaVirus : காரைக்குடி அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 9 பேர் மூச்சுத்திணறி உயிரிழப்பு?

கொரோனா வைரஸ்

காரைக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா மையத்தில் அடுத்தடுத்து 9 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

  • Share this:
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் புதிதாக திறக்கப்பட்ட கொரோனா மையத்தில் சீரான ஆக்சிஜன் கிடைக்காததால் அடுத்தடுத்து 9 பேர் மூச்சுத்திணறலால் இறந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர், மருத்துவ இணை இயக்குநர் ஆய்வு செய்தனர்.

    காரைக்குடி ரயில்வே ரோட்டில் பழைய அரசு மருத்துவமனையும், சூரக்குடி செல்லும் சாலையில் புதிய மருத்துவமனையும் செயல்படுகின்றது. இரண்டு இடங்களிலும் கொரோனா வார்டுகளில் 110 ஆக்சிஜன் வசதி படுக்கைகளுடன் செயல்பட்டு வந்த நிலையில் படுக்கைகள் நிரம்பியதால், கொரோனா அறிகுறியுடன் வருவோருக்கு வராண்டாவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும் படுக்கை இல்லையெனவும் புகார் எழுந்தது. இதையடுத்து சூரக்குடி சாலையில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் 10.5 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு வந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடத்தில் 300 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 200 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டன.இந்த மையத்தை நேற்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

    இதையடுத்து நேற்று இரவோடு இரவாக பழைய மருத்துவமனையில் இருந்த 50 பேர் புதிய மருத்துவமனையில் இருந்து 60 பேர் என மொத்தம் 110 பேர் கொரோனா தொற்று மற்றும் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர்கள் அவசர அவசரமாக மாற்றப்பட்டனர்.

    புதிதாக திறக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் அதிகாலையில் இருந்து அடுத்தடுத்து 9 பேர் மூச்சுதிணறலால் உயிரிழந்தனர். சிசிச்சையில் இருந்தவர்களுக்கு ஆக்சிஜன் சீராக கிடைக்காதலாலே உயிரிழப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

    இச்சம்பவத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, கோட்டாட்சியர் சுரேந்திரன், மருத்துவ இணை இயக்குநர் இளங்கோமகேஸ்வரன் ஆகியோர் மருத்துவமனையை ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறுகையில், 'நோயாளிகளை அவசர, அவசரமாக புதிய கட்டிடத்திற்கு மாற்றியதால் ஆக்சிஜன் சீராக கிடைக்கவில்லை மருத்துவமனை ஊழியர்கள் பற்றாக்குறையால் மருத்து, மாத்திரைகள் முறையாக வழங்கவில்லை. குடிநீர் வசதியும் இல்லை,' என்று கூறினர்.

    Must Read : கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பேசினாலே வைரஸ் பரவும் - மத்திய அரசு

     

    இது குறித்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி கூறும் போது 3 பேர் மட்டுமே இறந்துள்ளனர். ஏற்கனவே 110 பேர் சிகிச்சையில் இருந்தனர். தற்போது தனியார் மருத்துவமனைகளில் இருந்து அதிகளவில் இங்கு சிகிச்சைக்கு வந்துள்ளனர். இதனால் ஆக்சிஜன் படுக்கைகளில் 179 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 230 டன் திரவ ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு வாய்ப்பில்லை,'' என்று கூறினர்.
    Published by:Suresh V
    First published: