Corona Vaccine | இந்தியாவில் ஒரே நாளில் 86 லட்சம் தடுப்பூசி டோஸ்கள்: உலக அளவில் அதிகம்

கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 86 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16ந்தேதி தொடங்கி நடந்து வருகின்றன.  இதன்பின்பு கடந்த மே 1ஆம் தேதியில் இருந்து 18 வயது அடைந்த அனைவருக்கும் தடுப்பூசி போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி வந்த மத்திய அரசு, நேற்று முதல் 18ல் இருந்து 45 வயது வரை உடையவர்களுக்கும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு இலவசமாக கொடுக்கிறது. இந்த சூழலில் நேற்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவாக 85,96,807 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இதில் 78,09,771 பேர் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட நிலையில் 7,87,038 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 15 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு ஒரேநாளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதற்கடுத்த இடங்களில் கர்நாடகா, உத்தரபிரதேசம், குஜராத், ஹரியானா மாநிலங்கள் உள்ளன.

    தமிழகத்தில் நேற்று மட்டும் 3,66,374 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கோவின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நாடு முழுவதும் ஏப்ரல் 5ம் தேதி ஒரேநாளில் 45 லட்சம் தடுப்புசிகள் செலுத்தப்பட்டதே அதிகபட்சமாக இருந்த நிலையில் தற்போது அந்த அளவை தாண்டியுள்ளது.

    மேலும் படிக்க... ஏ.டி.எம்.களையே ஏமாற்றி நூதன கொள்ளையடிப்பவர்களை பிடிக்க தனிப்படை

    அடுத்ததாக தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான இலக்கை அடைய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஜூன் மாதத்தில் மட்டும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 31 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு தடுப்பூசி போடப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தடுப்பூசி செலுத்தியவர்களையும், முன்களப் பணியாளர்களையும் வாழ்த்துவதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். தடுப்பூசியே நம் வலிமை வாய்ந்த ஆயுதம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Vaijayanthi S
    First published: