• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • COVID-19 Deaths in India | 40 வயது நோயாளிக்காக மருத்துவமனையில் தன் படுக்கையைக் தியாகம் செய்த 85 வயது முதியவர்- வீட்டிற்குச் சென்ற பிறகு உயிரிழந்தார்

COVID-19 Deaths in India | 40 வயது நோயாளிக்காக மருத்துவமனையில் தன் படுக்கையைக் தியாகம் செய்த 85 வயது முதியவர்- வீட்டிற்குச் சென்ற பிறகு உயிரிழந்தார்

40 வயது நோயாளிக்காக தன் படுக்கையை தியாகம் செய்த 85 வயது கொரோனா நோயாளி நாராயண் தபால்கர்.

40 வயது நோயாளிக்காக தன் படுக்கையை தியாகம் செய்த 85 வயது கொரோனா நோயாளி நாராயண் தபால்கர்.

நாக்பூரில் 40 வயது நோயாளிக்காக மருத்துவமனையில் தன் படுக்கையைக் காலி செய்து கொண்டு வீட்டுக்குச் சென்ற 85 வயது முதியவர் வீட்டில் மரணமடைந்தார். ஆனால் ‘நான் என் வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன், ஒரு வாலிபரின் உயிரைக் காப்பாற்றுவது முக்கியம்’ என்று அவர் மருத்துவரிடம் கூறிச்சென்றதாகக் கூறப்படுகிறது.

  • Share this:
    நாராயண் தபால்கர் என்ற இந்த 85 வயது முதியவர் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராவார். இவர் நாக்பூர் இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பிறகு இவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியானது.

    இவரது ஆக்சிஜன் லெவலும் இறங்கிக் கொண்டிருந்தது, ஆனால் அப்போது மருத்துவமனையில் மனைவி ஒருவர் தன் 40வயது கணவருக்காக மருத்துவமனையில் இடம் கேட்டு மன்றாடியதைப் பார்த்துள்ளார் தபால்கர்.

    அப்போது 85 வயதான தபால்கர் மருத்துவர்களிடம், ‘நான் என் வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். இளம் வாலிபர் ஒருவரின் உயிர் முக்கியம், அவரது குழந்தைகளும் சிறு வயதினர், என் படுக்கையை அவருக்குக் கொடுங்கள்’ என்று கூறியுள்ளார்.

    மருத்துவர்கள் அவரிடம் உங்கள் உடல் நிலை சரியாக இல்லை உங்களுக்கும் சிகிச்சை அவசியம் என்று கூறியுள்ளனர். ஆனால் தபால்கர் தன் மகளைக் கூப்பிட்டு அவரிடம் சூழ்நிலையை விளக்கி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்றார், ஆனால் வீட்டுக்குச் சென்று 3 நாட்கள்தான் உயிரோடு இருந்துள்ளார்.

    இவரைப்பற்றி சமூக ஊடகத்தில் நாராயண் தபால்கர் இன்னொரு நோயாளிக்காக தன் மருத்துவமனை படுக்கையை தியாகம் செய்ததாக பதிவு வெளியானது.

    தபால்கர் கூறியதாக அவரது மகள் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவிக்கும் போது, “ஏப்ரல் 22ம் தேதி 85 வயதான என் தந்தையின் ஆக்சிஜன் லெவல் இறங்கியது, ஐஜிஆர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். பெரிய முயற்சிக்குப் பிறகு அவருக்கு மருத்துவமனையில் அனுமதி கிடைத்தது, படுக்கையும் கிடைத்தது. ஆனால் 2 மணி நேரத்தில் அவர் மருத்துவமனையிலிருந்து வந்து விட்டார், அதாவது கடைசி நேரத்தை எங்களுடன் கழிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். இளம் நோயாளி பற்றியும் குறிப்பிட்டார்” என்றார்.

    மருத்துவமனை விதிகளின்படி ஒருவர் தானாகவே மருத்துவமனையிலிருந்து சென்றாலும் அவர் கோரிக்கை வைக்கும் நபருக்கு படுக்கையை அளிக்க முடியாது என்பதே. ஆனால் அவர் வீட்டுக்கு சென்றதால் அந்தப் படுக்கை வேறு ஒருவருக்கு உதவியது. இத்தனைக்கும் முதியவர் தபால்கரை கோவிட் 19 வார்டுக்குக் கொண்டு செல்லவில்லை, அவர் கேஷுவால்டி பிரிவில்தான் இருந்தார், ஆனாலும் தன் படுக்கையை வேறு ஒருவருக்கு விட்டுக்கொடுத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: