கொரோனா உயிரிழப்பு 8,000-ஐ தொட்டது! 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 16% அதிகரித்துள்ளது.

கொரோனா உயிரிழப்பு 8,000-ஐ தொட்டது! 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு..!
படம்: Reuters
  • Share this:
கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உலகளவில் எட்டாயிரத்தை தொட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை எட்டாயிரத்தை தொட்டுள்ளது. 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 16% அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 345 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 2,503 பேர் இறந்திருக்கின்றனர். இதேபோல ஈரானில் 988 பேரும், ஸ்பெயினில் 533 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐரோப்பிய நாடுகளுக்கு வெளிநாட்டினர் 30 நாட்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மசூதிகளில் 4 வாரங்களுக்கு தொழுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


கொரோனா தாக்குதல் அச்சத்தால், நாசா பணியாளர்கள் வீடுகளில் இருந்து பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல, ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் கோசோ தாஷிமாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கத்தாரில் அனைத்து வணிக வளாகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஜெர்மனி, பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போரிஸ் ஜான்சன், ஐரோப்பிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை தெரிவித்தார்.

இதேபோல, அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யும் வகையில், 74 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊக்குவிப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. அமெரிக்கர்களுக்கு நேரடியாக வழங்குவது, சிறு வணிகர்களுக்கு உதவுவது, விமான நிறுவன நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையினருக்கு உதவுவது ஆகிய நடவடிக்கைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.Also see:

 

 

 
First published: March 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading