குஜராத்தில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து - 8 நோயாளிகள் உயிரிழப்பு

குஜராத்தில் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், 8 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்

குஜராத்தில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து - 8 நோயாளிகள் உயிரிழப்பு
Fire broke out at the Shrey Hospital in Navrangpura area of Ahmedabad.
  • News18
  • Last Updated: August 6, 2020, 10:05 AM IST
  • Share this:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நவ்ரங்பூரா பகுதியில் உள்ள ஷீரா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

எனினும், 8 நோயாளிகள் இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மின்சார கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தீ விபத்து தொடர்பாக மாநில அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
First published: August 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading