CoronaVirus : 125 நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு இன்று குறைந்தது!

கொரோனா

புனேவில் இருந்து விமானம் மூலம் 8 லட்சத்து 60 ஆயிரம் கோவீஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன.

  • Share this:
    இந்தியாவில், 125 நாட்களுக்குப் பிறகு குறைவான கொரோனா பாதிப்பு இன்று பதிவாகியுள்ளது. புனேவில் இருந்து விமானம் மூலம் 8 லட்சத்து 60 ஆயிரம் கோவீஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன.

    தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்படும் கோவீஷீல்டு தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், தமிழகத்தில் பல பகுதிகளில் தடுப்பூசிகள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டது. இதனால், உடனடியாக தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தியது.

    தமிழக மக்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசு நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்தும் வருகிறது. இந்நிலையில் புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான மூலம் 72 பார்சல்களில் 8 லட்சத்து 60 ஆயிரம் டோஸ் கோவீஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

    தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகளை சென்னை டி.எம்.எஸ் (DMS) வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்க்கு கொண்டு சென்றனர்.

    இந்நிலையில், 3 லட்சத்து 60 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்துகளை பெரியமேட்டில் உள்ள மத்திய மருத்துவ கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். தற்போது பெறப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகளை தட்டுப்பாடு உள்ள இடத்திற்கு அனுப்பி வைக்க இருப்பதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தியாவில் கடந்த 125 நாட்களுக்குப் பிறகு குறைவான கொரோனா பாதிப்பு இன்று பதிவாகியுள்ளது. இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 30 ஆயிரத்து 093 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 322 ஆக உள்ளது.

    Must Read : பெண்களுக்கு வழங்கும் இலவச பேருந்து டிக்கெட்... இப்படியும் ஒரு மோசடியா...!

    வைரஸ் பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 374 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,14,482 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 45,254 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 3 லட்சத்து 53 ஆயிரத்து 710 ஆக உள்ளது. குணமடைவோர் விகிதம் 97.32 சதவீதமாக இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது வரை 4,06,130 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுவரையில் நாடு முழுவதிலும் போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 41,18,46,401 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published: