• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனாவில் இருந்து மெல்ல மீளும் சென்னை - குணமடைவோர் விகிதம் உயர்வு

கொரோனாவில் இருந்து மெல்ல மீளும் சென்னை - குணமடைவோர் விகிதம் உயர்வு

கோப்புப்படம்

கோப்புப்படம்

சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுள் 79 சதவிகிதத்துக்கு மேல் குணமடைந்துள்ளனர்.

  • Share this:
சென்னையில் கொரோனா தொற்றால் 79,662 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 62,552 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 1295 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது சிகிச்சையில் 15,814 பேர் உள்ளனர்.

சென்னையில் சராசரியாக நாளொன்றுக்கு 8,000 முதல் 10,000 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கடந்த 14 நாட்களாக சென்னையில் தினமும் சராசரியாக 1,200 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. கடந்த ஜுன் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜுலை மாதத்தில் சென்னையில் பரவல் விகிதம் குறைந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் குணமடைந்தோர் விகிதம் 79 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. முதல் மண்டலமான திருவொற்றியூரில் இதுவரை 3,033 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 2,355 பேர் குணமடைந்துள்ளனர். இது 78% என்ற அளவாகும். மேலும், 608 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 என்பதாக உள்ளது.

மணலியில் தொற்று ஏற்பட்ட 1,447 பேரில் 1,151 பேர், அதாவது 80% பேர் குணமடைந்தள்ளனர். தவிர, 280 பேர் மட்டுமே சிகிச்சை பெறும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக உள்ளது.

Also read: சிவகங்கையில் மணல் கொள்கை புகார் - லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்

தண்டையார்பேட்டையில் 8,439 பேரில் 7,252 பேர் குணமடைந்த நிலையில், அதன் விகிதம் 86ஆக உள்ளது. தவிர, 1006 பேர் மட்டுமே சிகிச்சை பெறும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 181 ஆக உள்ளது.

அதிக பாதிப்புக்கு உள்ளாகிய ராயபுரத்தில் இதுவரை 9,840 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 8,455 பேர் குணமடைந்த நிலையில், அதன் சதவிகிதம் 86 ஆகவும் உள்ளது. 171 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய மண்டலங்களில் 86 சதவிகிதத்தினர் குணமடைந்துள்ளனர். இதற்கு அடுத்து, மாதவரம், அண்ணா நகர், தேனாம்பேட்டை, பொருங்குடி ஆகிய மண்டலங்களில் 81 சதவிகிதத்தினர் குணமடைந்துள்ளனர்.

சிகிச்சையில் இருப்போரில், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2199 பேர் சிகிச்சையில் உள்ளனர். குறைந்தபட்சமாக மணலியில் 280 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: