முகப்பு /செய்தி /கொரோனா / கொரோனா தடுப்பு பணியாற்றியோர் குழந்தைகளுக்கு கல்விக்கட்டணத்தில் 75 % தள்ளுபடி: தர்மபுரி தனியார் பள்ளி அறிவிப்பு

கொரோனா தடுப்பு பணியாற்றியோர் குழந்தைகளுக்கு கல்விக்கட்டணத்தில் 75 % தள்ளுபடி: தர்மபுரி தனியார் பள்ளி அறிவிப்பு

கொரோனா தடுப்பு பணியாற்றியோர் குழந்தைகளுக்கு கல்விக்கட்டணத்தில் 75 % தள்ளுபடி அறிப்பு

கொரோனா தடுப்பு பணியாற்றியோர் குழந்தைகளுக்கு கல்விக்கட்டணத்தில் 75 % தள்ளுபடி அறிப்பு

கல்வி நிறுவனங்களின் குழுமங்களை சேர்ந்த கல்வி நிறுவனங்கள் 50% முதல் 75% வரை கட்டணச் சலுகை அளித்தது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தருமபுரியில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க போராடும் மருத்துவத்துறை, காவல்துறை மற்றும் நகராட்சி துறை சார்ந்த பணியாளர்களின் குழந்தைகளுக்கு, கல்விக்கட்டணத்தில் 75% வரை சலுகை அளிக்க தனியார் பள்ளி ஒன்று முன்வந்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பச்சமுத்து கல்வி நிறுவனம் சார்பில் கல்லூரி,  சிபிஎஸ்இ பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது.

இதன் தாளாளர் பச்சமுத்து பாஸ்கர்,  கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவத்துறை, செவிலியர்கள், காவல்துறையினர் சுகாதாரப் பணியாளர்கள், நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிபிஎஸ்இ மெட்ரிக் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் சேரும்போது 50% முதல் 75% வரை கட்டணச் சலுகை உடன் சேர்த்துக் கொள்வதாக  தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவத்துறை செவிலியர்கள் மற்றும் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் குழந்தைகளுக்கு 50 சதவீத கட்டண சலுகையுடன் மெட்ரிக் சிபிஎஸ்இ மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் சேர்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தூய்மைப் பணியாளர்கள் , நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குழந்தைகளுக்கு 75 சதவீத கட்டண சலுகையுடன் அவர்களின் குழந்தைகளுக்கு சிபிஎஸ்சி மெட்ரிக் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் வாய்ப்பு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published:

Tags: Dharmapuri, Education