இந்தியாவில் இந்தாண்டின் அதிகபட்ச கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் பதிவு...

கொரோனா

இந்தியாவில் இந்தாண்டில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 72330 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் 3 நாட்களாக சரிந்து வந்த கொரோனாவின் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் இந்தாண்டின் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. புதிதாக 72,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 459 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், கேரளா உள்ளிட்ட 8 மாநிலங்களின் பங்கு 80 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதிக்கு பிறகு முதல் முறையாக கொரோனா பாதிப்பு 70,000க்கும் மேல் பதிவாகியுள்ளது.

  நாட்டின் மொத்த பாதிப்பில் மகாராஷ்டிராவில் மட்டும் 39,544 பேருக்கு தொற்று உள்ளது. கடந்த டிசம்பர் 5ம் தேதிக்கு பிறகு முதன் முறையாக ஒருநாள் உயிரிழப்பு 400ஐ கடந்துள்ளது. கொரோனா ஒருபுறம் வேகமாக பரவி வரும் சூழலில் 14 மாநிலங்களில் ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க...மாணவன் சுத்தியலால் அடித்துக் கொலை.. தாய் திட்டியதால் ஏற்பட்ட விபரீதம்...

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: