இதுவரை இல்லாதது... ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாதது... ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கோப்புப்படம்
  • Share this:
இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 7097 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 150 பேர் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது. மகாராஷ்டிராவில் மூவாயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது. அங்கு உயிரிழப்பு 1635 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவின் வீட்டு வசதித்துறை அமைச்சரான ஜிதேந்திர அவாத்திற்கு ஏற்கெனவே கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொதுப்பணித்துறை அமைச்சர் அசோக் சவானிற்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


ஆனால் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால், உலக அளவில் கொரோனா பாதித்த நாடுகள் பட்டியலில் இந்தியா 11-ம் இடத்திலிருந்து, 10-ம் இடத்திற்கு சென்றது.

ஈரானை விட இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் இதுவரை 57, 605 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Also see...
First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading