வந்தவாசியில் கிராமங்களில் கொரோனா: 3 சிறுவர்கள் உட்பட 7 பேருக்கு பாதிப்பு

கொரோனா பாதித்த கிராமங்களை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைத்து வெளி நபர்கள் யாரும் வராத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வந்தவாசியில் கிராமங்களில் கொரோனா: 3 சிறுவர்கள் உட்பட 7 பேருக்கு பாதிப்பு
கோப்புப் படம்
  • Share this:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் ஒரே நாளில் 2 சிறுவர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளன.

வந்தவாசி அடுத்த 6 கிராமங்களில் வெளியூரில் இருந்து வந்தவர்களை சோதனை செய்ததில், 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களில் 3 பேர் சிறுவர்கள் ஆவர். பெரும்பாலானோர் சென்னை கோயம்பேடு தொடர்பு என தெரியவந்துள்ளது.


தொற்று பாதித்த அனைவரும் செய்யாறு அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் 6 கிராமங்களில் உள்ள தெருக்களில் சுகாதார துறையினர் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். கிராமங்களை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைத்து வெளி நபர்கள் யாரும் வராத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரேநாளில் வந்தவாசி சுற்றியுள்ள கிராமங்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். 











First published: May 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading