Home /News /coronavirus-latest-news /

வேலூர் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 7 பேர் உயிரிழப்பு... விரிவான விசாரணைக்கு உத்தரவு

வேலூர் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 7 பேர் உயிரிழப்பு... விரிவான விசாரணைக்கு உத்தரவு

வேலூர் அரசு மருத்துவமனை (கோப்பு படம்)

வேலூர் அரசு மருத்துவமனை (கோப்பு படம்)

வேலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவ கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

    வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேஸ்வரி, செல்வராஜ், சிராஜ் உள்ளிட்ட 4 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இந்த 4 பேரின் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை தான் காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    ஆனால், அவர்களின் மரணத்திற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரமும் விளக்கமளித்தார். உயிரிழந்தவர்கள் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், அதில் சிலரது நிலை மிகவும் மோசமாக இருந்ததாகவும் கூறினார். மேலும், இதர வார்டுகளில் சிகிச்சைபெற்று வந்த நோயாளிகளில் 3 பேர் திடீரென உயிரிழந்தனர்.

    இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், 7 பேர் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: CoronaVirus, Vellore

    அடுத்த செய்தி