புது வகை கொரோனா பாதிப்பு: பூடானில் 7 நாட்களுக்கு ஊரடங்கு

புது வகை கொரோனா பாதிப்பு: பூடானில் 7 நாட்களுக்கு ஊரடங்கு

கொரோனா வைரஸ்

பூடான் நாட்டின் திம்பு, பாரோ மற்றும் லாமொய்ஜிங்கா உள்ளிட்ட நகரங்களில் புது வகை கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

 • Share this:
  புது வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள பூடானில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவரும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  பூடானில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, மாவட்டங்களுக்கு இடையேயான இயக்கங்களுக்கு செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்நாட்டின் திம்பு, பாரோ மற்றும் லாமொய்ஜிங்கா உள்ளிட்ட நகரங்களில் புது வகை கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  இது குறித்து அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், உள்ளூரில் புதிய வகை கொரோனா பரவலுக்கான ஆதராரங்கள் கிடைத்துள்ளன. அதனால் கடுமையான கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே டிசம்பர் 23-ம் தேதியில் இருந்து 7 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது’ என தெரிவித்துள்ளது.

  மேலும், இந்த ஊரடங்கால் தொற்று பரவலை அரசால் கட்டுப்படுத்த முடியும். சமூகங்களுக்குள் பரவல் ஏற்படுவதும் குறையும். 7 நாட்கள் ஊரடங்கை நாம் முடிவு செய்த போதிலும், இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகளை தொற்று பரவல்தான் தீர்மானிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  இந்நிலையில், காய்கறிகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தில் இடையூறுகள் இருக்காது என்றும், பொதுமக்கள் தேவையான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: