இந்தியாவில் ஒரே நாளில் 6,566 பேருக்கு கொரோனா தொற்று: 194 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,58,333-ஆக உள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 6,566 பேருக்கு கொரோனா தொற்று: 194 பேர் உயிரிழப்பு
கோப்பு படம்
  • Share this:
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 58333 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6566 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 194 பேர் உயிரிழந்துள்ளதால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4531 ஆக அதிகரித்துள்ளது.இதில் 67,692 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2, 190 பேர் பாதிக்கப்பட்டதுடன், 105 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ஒட்டுமொத்த பாதிப்பு 57000 நெருங்கி வருகிறது. டெல்லி மற்றும் குஜராத்தில் பாதிப்பு 15000-ஐக் கடந்துள்ளது.

குறிப்பாக தலைநகரில் 24 மணி நேரத்தில் 792 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. முதல் தொற்று கண்டறியப்பட்ட கேரளாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Also see...

தொடர்ந்து பரவும் கொரோனா தொற்று: மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்க இருக்கிறதா ஊரடங்கு?

First published: May 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading