• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • இந்தியாவில் அதிக தொற்று பாதிப்பு - டாப் இடத்தில் சென்னை; புதிதாக இணைந்த மற்றொரு மாவட்டம்

இந்தியாவில் அதிக தொற்று பாதிப்பு - டாப் இடத்தில் சென்னை; புதிதாக இணைந்த மற்றொரு மாவட்டம்

கோப்புப்படம்

கோப்புப்படம்

நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் 64 சதவிகித பாதிப்பு 15 மாவட்டங்களில் பதிவாகி உள்ளது. 

  • Share this:
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,27,273 ஆக அதிகரித்துள்ளது. இதில் 6,367 பேர் உயிரிழந்துள்ளனர். 1,09,462 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் உயிரிழப்பு 5 சதவிகிதமாக உள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நாட்டில் புதிய ஹாட் ஸ்பாட் பகுதிகள் உருவாகி வருவது அரசுக்கு புதிய சவாலாக மாறி உள்ளது.

நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் வெளியிட்டுள்ள குறிப்பில், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் 64 சதவீத பாதிப்பு 15 மாவட்டங்களில் இருந்தே பதிவாகி உள்ளது. மும்பை, டெல்லி மற்றும் சென்னையில் தொற்று பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது.

உலகளாவிய ஹாட் ஸ்பாட்களில் ஒன்றாக உள்ள மும்பை மாநிலத்தின் மொத்த பாதிப்பில் 57.37 சதவீதமாகவும், நாட்டின் மொத்த பாதிப்பில் 19.94 சதவீதமாகவும் உள்ளது. அதேபோல் டெல்லியில் கண்டறியப்பட்ட தொற்று  நாட்டின் மொத்த பாதிப்பில் 11.56 சதவீதமாக உள்ளது.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ கடந்து வருகிறது. நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் மொத்த பாதிப்பில், சென்னையின் பங்கு 67.91 சதவிகிதமாகும்.  நாட்டின் பாதிப்பில் சென்னையில் பங்கு 8.59 சதவீதமாகும்.

அதேபோல், தமிழகத்தில் செங்கப்பட்டு மாவட்டம் இந்த பட்டியலில் புதியதாக இடம் பெற்றுள்ளது. மாநிலத்தின் மொத்த பாதிப்பில் 5.26 சதவிகித பங்கும், நாட்டின் மொத்த பாதிப்பில் 0.67 சதவீதமும் செங்கல்பட்டு வகிக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 9,851 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளதோடு, 273 பேர் ஒரே நாளில் இறந்துள்ளனர். உலகில் அதிக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது. இந்தியாவில், மகாராஷ்ரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை 10,000 ஆயிரத்தை கடந்துள்ளது.

மகாராஷ்ராவின் மொத்த பாதிப்பு 77,793 ஆகவும், தமிழகத்தில் 27,256 ஆகவும், டெல்லியில் 25,004 ஆகவும், குஜராத்தில் 18,584 ஆகவும் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Also read... ராயபுரம், தண்டையார்பேட்டையில் ஒரே நாளில் 300-க்கும் அதிகமாக தொற்று: அதிர்ச்சி தரும் சென்னை அப்டேட்!






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: