Oxygen : சுவிட்சர்லாந்தில் இருந்து 600 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியா வருகை

ஆக்சிஜன் செறிவூட்டிகள்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், உள்ளிட்ட உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையைத் சமாளிக்க மத்தி-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கெண்டு வருகின்றன. அந்த வகையில், ஆக்சிஜன், உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களின் பற்றாகுறையைப் போக்க, தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    அதன்படி, அமெரிக்கா, இங்கிலாந்து, கத்தார் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்து வருகின்றன. அந்த வகையில் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து விமானம் மூலமாக 600 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 50 வெண்டிலேட்டர்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்கள் அதிகாலை இந்தியாவிற்கு வந்து சேர்ந்திருப்பதாக, இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்‌ஷி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகள், சுங்கத்துறை ஒப்புதலுக்காக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதை மத்திய அரசு மறுத்துள்ளது. சீனா, இங்கிலாந்து உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 3 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவுக்கு வந்துள்ளன.

    அந்த செறிவூட்டிகள், சுங்கத்துறை ஒப்புதலுக்காக அத்துறையின் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த தகவல் முற்றிலும் தவறானது. உண்மையோ, அடிப்படையோ இன்றி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 3,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள், சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப் பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : தமிழகத்தில் புதிதாக 24,898 பேருக்கு கொரோனா பாதிப்பு - முழு விவரம்

     

    அத்துடன், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியமும் இத்தகவலை மறுத்துள்ளது. சுங்க இலாகா உடனுக்குடன் இறக்குமதி பொருட்களை கையாண்டு அனுப்பி விடுவதாகவும், எந்த பொருட்களும் சுங்க இலாகாவிடம் நிலுவையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: