மத்தியபிரதேசத்தில் 60 மணி நேர முழு ஊரடங்கு: இன்று மாலை 6 மணி முதல் அமல்

ஊரடங்கு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்தியபிரதேசத்தின் 60 மணி நேர முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும் இன்று மாலை 6 மணி முதல் இது அமலுக்கு வருகிறது.

 • Share this:
  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்தியபிரதேசத்தின் 60 மணி நேர முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும் இன்று மாலை 6 மணி முதல் இது அமலுக்கு வருகிறது.

  நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அதன்படி, மத்தியபிரதேசத்திலும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த போபால், இந்தூர், ஜபல்பூர், குவாலியர் போன்ற முக்கிய நகரங்களில் கடந்த 3 வாரங்களாக ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

  எனினும், மத்தியபிரதேசத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்து 43 ஆக அதிகரித்தது. மேலும் 13 பேர் உயிரிழந்தனர்.

  இந்நிலையில், முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் நேற்று கொரோனா நோய் தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

  இதனைத் தொடர்ந்து, சிவராஜ்சிங் சவுகான் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கொரோனாவை கட்டுப்படுத்த மத்தியபிரதேசத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் 60 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு, 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. 12 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணிவரை அமலில் இருக்கும்.” என்று கூறினார்.

  மத்திய, மாநில அரசுகள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றது. பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்துவதற்கு மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையில் கேளர மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

  Must Read : பினராயி விஜயன், ராதிகா சரத்குமார் கொரோனாவில் இருந்து நலம்பெற வேண்டும் - கமல்ஹாசன்

   

  இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் புலம் பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கு அச்சம் காரணமாக தங்கள் சொந்த ஊர்களை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: