வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பப்பில் ஒன்றாக குடிக்கலாம் : கட்டுப்பாடுகளை தளர்த்தும் வேல்ஸ் நாடு!

வேல்ஸ் நாடு

வெல்ஷ் நிர்வாகம் பல வீடுகளில் இருந்து குழுக்களாக ஆறு பேர் வரை பப்கள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றில் சந்திக்க அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளது.

  • Share this:
கொரோனா வைரஸின் கொடிய இரண்டாவது அலைகளால் இந்தியா உட்பட பல நாடுகள் பேரழிவை சந்தித்து வரும் நிலையில், கிரேட் பிரிட்டனின் ஒரு அங்கமாக இருக்கும் வேல்ஸ் நாட்டில் கொரோனா விதிகளை தளர்த்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி மே 17 முதல் பப்கள், உணவகங்கள் மற்றும் பிற உணவகங்களில் அமர்ந்து மக்கள் உணவருந்தலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அப்பகுதியில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து, வேல்ஸ் நிர்வாகம் பல வீடுகளில் இருந்து குழுக்களாக ஆறு பேர் வரை பப்கள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றில் சந்திக்க அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே முதல்வராக இருந்த டிரேக்ஃபோர்ட் , மே 6ம் தேதி நடந்த தேர்தலுக்குப் பிறகு வேல்ஸ் அரசாங்கத்தின் தற்போதைய தலைவராக மீண்டும் பதவி வகித்துள்ளார். டிரேக்ஃபோர்ட் முதலில் தேர்தல்களுக்கு முன்னர் தளர்வுகளை அறிவித்திருந்தார். மேலும் வேல்ஸ் பாராளுமன்றமான செனெட்டின் கட்டுப்பாட்டை யார் பெறுவார்கள் என்பது தெரிந்த பிறகு விதிகளை தளர்த்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ :  அமெரிக்காவில் தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கு முகக்கவசத்திலிருந்து விடுதலை: மிகப்பெரிய மைல்கல், நல்ல நாள்- அதிபர் பைடன் உற்சாகம்

இப்போது டிரேக்ஃபோர்டின் தொழிற்கட்சி நாட்டில் மீண்டும் அதன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டதையடுத்து, தளர்வுகள் வருகிற மே17ம் தேதி முதல் (திங்கள்கிழமை) அமலுக்கு வரும் என்பதை உறுதிப்படுத்தினார். இதுதவிர முதல்வர் டிரேக்ஃபோர்டின் கொரோனவால் தூண்டப்பட்ட கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு நிதி உதவியையும் அறிவித்தார்.

இதுகுறித்து டிரேக்ஃபோர்டு தனது வலைதளபக்கத்தில் "தகுதிவாய்ந்த வணிகங்கள் மீண்டும் திறக்கும்வரை மற்றும் மிகவும் சாதாரண வர்த்தக நிலைமைகளை நோக்கிச் செல்லத் தயாராகும் வரை 25k யூரோ டாலர்கள் நிதிஉதவி பெறுவார்கள்" என்று உறுதியளித்திருந்தார். மெயில் ஆன்லைன் பத்திரிகையின்படி, ஜூன் மாதம் வரை வணிகங்களுக்கான ஆதரவு தொகுப்பு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ :  இன்ஸ்டாகிராம் Live-ல் பதிவான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்!

விரைவான தடுப்பூசி திட்டம் நாடு இயல்பு நிலைக்கு வர உதவியதால், மே 11 அன்று வேல்ஸ் நாட்டில் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆகவும், ஒரே ஒரு உயிரிழப்பை மட்டுமே பதிவு செய்துள்ளது. வேல்ஸின் அண்டை நாடுகளான வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை அந்தந்த பிராந்தியங்களில் கோவிட் நிலைமையைக் கட்டுப்படுத்தியுள்ளன. செவ்வாயன்று ஸ்காட்லாந்தில் 238 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. வடக்கு அயர்லாந்தில் 89 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், இந்தியா தொடர்ந்து தினமும் சாதனை படைக்கும் கோவிட் எண்களை பதிவு செய்து வருகிறது. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 4205 கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து மிக உயர்ந்ததாகும். இந்தியாவின் செயலில் உள்ள கொரோனா பாதிப்பு 37 லட்சத்தை தாண்டியுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published: