ஆந்திராவில் பள்ளிகள் திறந்த பிறகு, 630 மாணவர்கள், 842 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது

கோப்புப் படம்

வரும் 16 ஆம் தேதி தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது

 • Share this:
  ஆந்திராவில் கடந்த 2ம் தேதி முதல் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்ட பின்பு 630 மாணவர்களுக்கும், 842 ஆசிரியர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்களின் வருகை 40 விழுக்காடு அளவிலேயே இருக்கிறது.

  இந்நிலையில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எடுக்கப்படும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தற்போது வரை 630 மாணவர்களுக்கும், 842 ஆசிரியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படும் என கூறியுள்ள ஆந்திர அரசு 3 வாரங்களுக்கு பின்பு நிலைமை எப்படி உள்ளது என பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

  நாடு முழுவதும், கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துவருவதாக கூறப்பட்டுவரும் நிலையில், பள்ளிகள் திறக்கும் நடவடிக்கையில் மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில், ஆந்திராவில் பள்ளிகள் கடந்த வாரம் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

  இந்நிலையில்,வரும் 16 ஆம் தேதி தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அரசு திட்டமிட்டது. ஆனால், பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால், திறக்கும் முடிவை தமிழக அரசு மறு பரிசீலனை செய்துவருகிறது. மேலும், பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா என்பது பற்றி பள்ளி கல்வித்துறை பெற்றோர்களிடம் கருத்துகளை கேட்க உள்ளது.

  பெற்றோர்கள் சொல்லும் கருத்துகளை பொறுத்தே, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது பற்றி அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அண்டை மாநிலமான ஆந்திராவில் மாணவர்கள் , ஆசிரியர்கள் தொற்றுக்குள்ளான செய்தி சற்று அச்சத்தை ஏற்படுத்துவதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர்.  ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
  Published by:Yuvaraj V
  First published: