• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் - எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?

வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் - எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?

கடுமையான கோவிட் -19 உடன் தொடர்புடைய நோய்களில் பாலியல் அடிப்படையிலான வேறுபாடுகள் ஆண்களை அதிக ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று  நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் (Nature Communications) வெளியிட்ட ஆய்வில் எழுதினர். கூடுதலாக, உலகளவில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயுள்ள பெண்கள் மற்றும் ஆண்களின் விகிதாச்சாரத்தில் உள்ள ஒற்றுமையை ஆசிரியர்கள், "மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிட் -19 நோயாளிகளில் மிகவும் பொதுவானதாகக் கொமொர்பிடிட்டிகள் (comorbidities in hospitalised Covid-19 patients) காணப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

இம்மாதம் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பிய 52 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

  • Share this:
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று, தமிழகத்தில் மிக தீவிரம் அடைந்து வருகிறது. சென்னை விமான நிலையத்தில் தற்பொழுது உள்நாட்டு விமான பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உள்ளது. அதேவேளையில் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக தமிழகம் திரும்பி வருகின்றனர்.

பல்வேறு நாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகம் திரும்ப பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் இம்மாதம் மட்டும் 4812 பேர் தமிழகத்தில் திரும்பியுள்ளனர். தாயகம் திரும்பும் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை,வீட்டில் தனிமைப்படுத்தல் என்பது கட்டாயம்.

தமிழகம் திரும்பிய ஊர்களில் பெரும்பாலானோர் அரபு நாடுகளிலிருந்து வந்தவர்களாக உள்ளனர். கத்தார், சவுதி அரேபியா துபாய், மஸ்கட், பஹ்ரைன் ஆகிய நாடுகளிலிருந்து வந்த 52 பயணிகள் பயணித்து வந்துள்ளனர்.

கத்தார் - 33

சவுதி அரேபியா - 9

துபாய் - 4

பஹ்ரைன்- 4

மஸ்கட்- 2

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இருந்து நேரடியாக சென்னை விமான நிலையத்திற்கு தற்போது விமான சேவை இல்லை. எனவே இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது பின்னர் அவர்கள் சென்னை விமான நிலையத்தை வந்தடைவர். இவர்கள் சர்வதேச பயணிகள் கணக்கில் வருகின்றனர்.

மேலும் படிக்க...

ரிலையன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ஜூலை 15ஆம்தேதி நடக்கும் என அறிவிப்பு

ஜூன் இரண்டாம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 32 சர்வதேச விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது. மேலும் இந்த வார இறுதியிலும் பல்வேறு நாடுகளில் சிக்கியிருக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் திரும்பி வர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: