ஹோம் /நியூஸ் /கொரோனா /

தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு கூடுதலாக 5 ஆயிரம் படுக்கைகள் ஒதுக்க தமிழக அரசு முடிவு

தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு கூடுதலாக 5 ஆயிரம் படுக்கைகள் ஒதுக்க தமிழக அரசு முடிவு

இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 73,73,375-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 57,386 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 73,73,375-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 57,386 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு கூடுதலாக 5 ஆயிரம் படுக்கைகள் ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பது சிக்கலாகி உள்ளது. சுகாதாரத்துறை தகவல்கள் படி  ஏப்ரல் மாத இறுதியில் 29,074 படுக்கைகளும் 3,371 வெண்டிலேட்டர்களும் இருந்தன. அப்போது தமிழகத்தில் 864 ஆக்டிவ் நோயாளிகளும் கொரோனா அறிகுறிகளுடன் 1,846 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தற்போது இந்த எண்ணிக்கை 13,503ஆக உயர்ந்துள்ளது. இதில் 10,223 பேர் சென்னை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரொனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் நோயாளிகளின் அறிகுறிகளை பொருத்து அவர்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் கல்லூரிகள், நந்தம்பாக்கம் வர்த்தகம் மையம் போன்ற COVID Care Centre-களுக்கு அனுப்பப்படுகின்றனர்.

ஓரளவு அறிகுறிகள் இருப்பவர்கள் COVID Health Centre-களுக்கு அனுப்பப்படுகின்றனர். இவை அடிப்படை சிகிச்சை வசதிகள் கொண்ட சிறிய மருத்துவமனைகளாகும். தீவிர அறிகுறிகளுடன் அவசர சிகிச்சை தேவைப்படுவோர் COVID Hospitals எனப்படும் உயர் சிறப்பு சிகிச்சை வசதி கொண்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அறிகுறிகள் இல்லாதவர்கள் வீடுகளில் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைப்படி படுக்கைகளுக்கு இடையில் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு புதிய படுகைகளை தயார் செய்ய வேண்டும். ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள கட்டடங்களில் இந்த அறிவுறுத்தல்கள்படி புதிய படுக்கைகள் உருவாக்க போதிய இடம் இல்லை. தற்போதுள்ள சூழலில் ஏற்கனவே பிற மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவைப்படும் இடத்தில்தான் பெரும்பாலும் கொரோனா சிகிச்சை படுக்கைகள் ஏற்படுத்தப்படுகின்றன. இது பிற ஆபத்தான நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் உள்நோயாளிகளுக்கு பாதிப்பு என்கிறார்கள் சுகாதார வல்லுநர்கள்.

இந்தியா முழுவதும் தற்போது 957 COVID Hospitals மற்றும்  2,362  COVID Health Centres உள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 600 மருத்துவமனைகள் கூடுதலாகியுள்ளன. அதாவது, மற்ற சிகிச்சைகளுக்காக கிடைக்க வேண்டிய மருத்துவ வசதிகள், படுக்கைகளில் 22% குறைந்து விட்டது. தற்போது மேலும், புதிதாக கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்த அரசுகள் முயற்சிக்கின்றன ஏற்படுத்த அரசுகள் முயற்சிக்கின்றன.

இதற்காக புதிய கட்டுமானம் அல்லது புதிய கட்டடத்தை படுக்கைகள் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தாதபோது அது பிற நோய் சிகிச்சைகளையே பாதிக்கும். இதனால் பிற நோய்களுக்கு சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் வீட்டிலேயே மரணிக்கும் ஆபத்து அதிகரிக்கும் என எச்சரிக்கிறார்கள் பொது சுகாதார வல்லுநர்கள். சில நேரங்களில்  அரசு மருத்துவமனைகளில் இறப்பு சதவீதத்தை குறைத்து காட்டவும் படுக்கை இல்லை என்று கூறி நோயாளிகளை அனுப்பிவிடுகின்றனர் என்கிறார் பொது சுகாதார நிபுணர் சுந்தரராமன்.

இந்நிலையில், சென்னையில்  உள்ள தீவிர சிகிச்சைகள் அளிக்கும் அரசு COVID மருத்துவமனைகளில் 5200 படுக்கைகள் இருப்பதாகவும், தனியாரில் 5000 படுக்கைகள் உள்ளதாகவும் , COVID Health Centres-ஆக செயல்படும் சிறிய மருத்துவமனைகளில் 2500 படுக்கைகள் இருப்பதாகவும், COVID Care Centre-களில் 5,400 படுக்கைகள் இருப்பதாகவும்  மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்தார்.

கொரோனா நோயாளிகளில் 3.8 சதவீத பேருக்கு மட்டுமே வெண்டிலேட்டர் தேவைப்படுகிறது. தீவிர சிகிச்சைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் படுக்கைகளை 10 ஆயிரம் படுக்கைகளாக அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது என தெரிவித்தார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Also see:

First published:

Tags: CoronaVirus, Govt hospitals, Health