• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • Covaxin : ஹைதராபாதில் இருந்து 50 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்து சென்னை வந்தது

Covaxin : ஹைதராபாதில் இருந்து 50 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்து சென்னை வந்தது

கோவேக்சின்

கோவேக்சின்

ஹைதராபாத்தில் இருந்து 50 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு, மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

  • Share this:
    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவீஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், ஹைதராபாத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 10 பெட்டிகளில் 290 கிலோ எடையுள்ள 50 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

    தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு, சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.

    தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மூன்றாவது நாளாக கொரோனா பரவல் குறைந்து, ஒரு நாள் பாதிப்பு 34,867ஆக பதிவாகியுள்ளது.

    ஒரே நாளில் 404 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20,872 ஆக அதிகரித்துள்ளது.

    Must Read :  தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியதற்கு கல்வியாளர்கள் வரவேற்பு...

     

    ஒரே நாளில் 27,026 பேர் குணமடைந்துள்ளனர், இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15,54,759ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: