ஒரே துணிக்கடையில் 50 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் ஒரே துணிக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள் 50 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே துணிக்கடையில் 50 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று
மாதிரிப் படம்
  • Share this:
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. ஜூலை 14 நிலவரப்படி சென்னையில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,295-ஆக இருந்தது.

இந்நிலையில் பூந்தமல்லியில் செயல்படும் ஜவுளிக்கடையில் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதன்காரணமாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் 60 பெருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 50 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் படிக்க...


புதுச்சேரியில் கொரோனாவால் தொடர்ந்து மூடப்படும் அரசு அலுவலகங்கள் - தலைமை தபால் நிலையமும் மூடல்

இதனையடுத்து அந்த கடையை மாநகராட்சி அதிகாரிகள் மூடினர். பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடைக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டுமெனவும் அறிகுறி இருந்தால் உடனே நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading