உச்ச நீதிமன்ற ஊழியர்கள் 50 சதவிகித பேருக்கு கொரோனா? இன்றைய வழக்கு விசாரணைகள் ஒரு மணி நேரத்திற்கு ஒத்திவைப்பு...

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற ஊழியர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் முன்புபோல் வீட்டிலிருந்தே காணொளி மூலம் வழக்கு விசாரணைகளைத் தொடர நீதிபதிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

  • Share this:
    இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 904 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.  இதில் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,774 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உலகளவில் கொரோனா பரவலில் இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது.

    கொரோனா தொற்று பரவல் திகைக்கவைக்கும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற ஊழியர்கள் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், உச்ச நீதிமன்ற வளாகம், அறைகள் முழுவதுமே கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல நீதிபதிகளும் இனி முன்புபோல் காணொளியில் விசாரணையை வீட்டிலிருந்தே நடத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதே வேளையில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவிருந்த விசாரணை 11.30 மணிக்கும், 11 மணிக்கு நடைபெறவிருந்த விசாரணை 12 மணிக்கும் மாற்றிவைக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற கூடுதல் பதிவர் தெரிவித்துள்ளார்.



    மேலும் படிக்க... அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்: சிகிச்சை அளிக்க சென்னையில் மீண்டும் 3 அடுக்கு படுக்கைகள்...



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: