Home /News /coronavirus-latest-news /

இந்தியாவில் கொரோனா காரணமாக ஒரேநாளில் 50 மருத்துவர்கள் மரணம்:இந்திய மருத்துவ சங்கம் தகவல்!

இந்தியாவில் கொரோனா காரணமாக ஒரேநாளில் 50 மருத்துவர்கள் மரணம்:இந்திய மருத்துவ சங்கம் தகவல்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக 24 மணி நேரத்தில் 50 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக 24 மணி நேரத்தில் 50 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

    கொரோனா 2வது அலை இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2 தினங்களாக இந்தியா முழுவதும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளபோதிலும் இறப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    இதுவரை இல்லாத அளவாக  24 மணி நேரத்தில் 4,329 பேர் மரணமடைந்துள்ளனர்.  இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா இறப்பு எண்ணிக்கை அச்சமுட்டும் நிலையில், மருத்துவர்களின் இறப்பும் உயர்ந்து வருகிறது.

    இந்தியாவில், 24 மணி நேரத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.கே.அகர்வால் உள்ளிட்ட  50 மருத்துவர்கள்  கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.  கொரோனா தொற்றின் 2வது அலைக்கு இதுவரை 244 மருத்துவர்கள் பலியாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு கொரோனா பரவலின்போது இந்தியாவில் 730 மருத்துவர்கள் தொற்றுக்கு பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதிகபட்சமாக பீகாரில் 69 மருத்துவர்களும் உத்தரபிரதேசத்தில் 34 மருத்துவர்களும் டெல்லியில் 27 மருத்துவர்களும் பலியாகியுள்ளனர். இவர்களில் 3 சதவீதத்தினர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி எடுத்துகொண்டுள்ளனர்.

    இந்தியாவில் 66 சதவீத சுகாதார பணியாளர்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.

    கொரோனா 2வது அலை அதிக இறப்புகளை ஏற்படுத்தி வருகிறது, குறிப்பாக முன்கள பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என இந்திய மருத்துவ சங்கத்தின்  தலைவர் ஜெ.ஏ.ஜெயலால் தெரிவித்துள்ளார்.  மருத்துவ பணியாளர்களிடையே தடுப்பூசி பாதுகாப்பைஅதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்திய மருத்துவ சங்கத்தின் தகவல்படி ஆந்திராவில் 21 மருத்துவர்களும்,  தெலங்கானாவில் 19 மருத்துவர்களும், மகாராஷ்டிராவில் 13 மருத்துவர்களும், தமிழகத்தில் 10 மருத்துவர்களும் கர்நாடக மற்றும் ஒடிசாவில் தலா 8 மருத்துவர்களும்  கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Corona, Corona death, Doctor

    அடுத்த செய்தி