கொரோனாவால் குணமடைந்த குட்டி சிறுமியின் பாய்... பாய்... நடனம்!

கொரோனாவால் குணமடைந்த குட்டி சிறுமியின் பாய்... பாய்... நடனம்!
கொரோனாவால் குணமடைந்த குட்டி சிறுமியின் பாய்...பாய் நடனம்
  • Share this:
சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5-வயது சிறுமி பூரண குணமடைந்து மருத்துவமனை விட்டு செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக கூறப்பட்டாலும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,118 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 394 பேருக்கு புதிதாக கொரோனா தாக்கம் உள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,576 ஆகவும் அதிகரித்துள்ளது.


Also see...கொரோனா பாதித்தக் குழந்தைகளைக் காக்க மழலையாக மாறிய மருத்துவர்கள்! சீனாவில் நெகிழ்ச்சி

11,864 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சீன சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
16, 155 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமி, 16 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளார்.வீடு திரும்பும் முன்பாக மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறுமி நடனமாடும் வீடியோ இணையத்தில் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.

First published: February 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading