• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தடுப்பூசி கண்டு பயம் வேண்டாம்: சரியான நேரத்தில் ஏன் தடுப்பூசி போட வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள்..

தடுப்பூசி கண்டு பயம் வேண்டாம்: சரியான நேரத்தில் ஏன் தடுப்பூசி போட வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள்..

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தடுப்பூசிகளின் இன்னொரு நன்மை அது அதை சார்ந்த மற்ற நோய்களில் இருந்தும் காப்பாற்றும்.

  • Share this:
    தடுப்பூசிகள் மனித இனத்திற்கு மருத்துவ அறிவியலின் மாபெரும் பரிசுகளில் ஒன்று. அது அம்மை மற்றும் போலியோ போன்ற உயிர்க்கொல்லி நோய்களை கட்டுப்படுத்தவும் முழுமையாக விரட்டவும் உதவி உள்ளது. சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வது சமூக பரவல் நோய்களில் இருந்து பாதுகாக்க அடிப்படை ஒன்றாக உள்ளது மேலும் முக்கியமாக தனி சுகாதாரத்தின் முக்கிய பங்காக உள்ளது. இதன் தேவை மற்றும் செயல்திறன் ஆதாரங்கள் வெளிப்படையாக தெரியினும் சிலர் இதன் தவிர்த்து பயன்பாட்டை இழக்கிறார்கள். தற்போது, இந்தியா COVID 19 இரண்டாவது அலையில் தத்தளிக்கும் தருணத்தில், ஒவ்வொருவரையும் தடுப்பூசி போட ஊக்குவித்து தடுப்பூசி போட்டுக் கொள்வது இந்தியாவை காப்பாற்றும். அதனால் தான், நாங்கள் ஒரு தனிநபர் தடுப்பூசி போட்டுக் கொள்ள பயப்பட தேவையில்லை என 5 முக்கிய காரணங்களும் ஏன் தாமதமின்றி போடவேண்டும் என்பதையும் இங்கே கூறியுள்ளோம்.

    மருத்துவ பராமரிப்பு சாத்தியம் இல்லாத இடத்தில் தடுப்பூசி அந்த நோயிலிருந்து பாதுகாக்கும்.

    இந்தியாவின் COVID 19 பிரச்சனையில் முக்கியமான ஒரு சிக்கல் தேவையான அளவு படுக்கைகள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் தேவை. சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வது, நிறைய நோயாளிகள் பாதுகாக்கப்பட்டனர் என்பதை உறுதி செய்வதில் இந்த நாட்டின் நலத்துறை அமைப்பின் பாரத்தை குறைக்கும்.

    தடுப்பூசி உங்களுக்கு பிடித்தவர்களை மற்றும் சமுதாயத்தை பாதுகாக்கும்.

    தடுப்பூசி போடாத பல மக்கள் உயிர்க்கொல்லி நோய்களை சுமந்து சென்று, உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றனர். இந்த COVID 19 தொற்றின் மிக முக்கிய நோய் பரப்பும் முறை இதுவே, அதாவது பல குடும்பங்களின் வயதானவர்கள் அங்குள்ள இளையவர்களின் அறிகுறி இல்லாதவர்கள் மூலம் பரவியது.

    தடுப்பூசி சிகிச்சை செலவை குறைக்கும்.

    தடுப்பூசிகள் நாட்டின் பொதுசுகாதார நிலையின் சுமையை குறைக்கும் உண்மையை தாண்டி, தடுப்பூசிகள் நோயின் சிகிச்சை செலவை குறைக்கும். இது பொருளாதாரம் சார்ந்த பல நன்மைகளும் கொண்டது மேலும் நலமான மக்கள் அதிகமான செழிப்புடனும் செயல்திறன் உடனும் இருப்பர்.

    தடுப்பூசிகள் டெலிவரி செய்ய மிக எளிது. 

    Network18 சஞ்சீவினி - அ ஷாட் ஆப் லைஃப் போன்ற, பெரும் தடுப்பூசி முகாம்கள், அனைத்து இந்தியர்களையும் COVID 19 - ற்கு எதிராக தடுப்பூசி போட வைக்க இலக்கு வைத்து, தடுப்பூசிகள் பெரும் எண்ணிக்கை மக்களுக்கு வேகமாக எடுத்து செல்ல முடியும். மேலும், நல்ல தலைவர்கள் தடுப்பூசிகளை கொடுக்கும் விதத்தை புதிதாக கொண்டு வந்து ஏழை மக்களுக்கு வேகமாக உலகத்தில் கொண்டு செல்ல முயல்கிறார்கள்.

    தடுப்பூசிகள் மற்ற நோய்கள் வரும் வாய்ப்பை குறைகிறது.

    தடுப்பூசிகளின் இன்னொரு நன்மை அது அதை சார்ந்த மற்ற நோய்களில் இருந்தும் காப்பாற்றும். ஏன் என்றால் அது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மாற்றி அமைத்து, தடுப்பூசிகள் குறிப்பிட்ட நோய்களுக்கு எதிராக உடலில் வைரஸ் போல உள்ள படிவங்களை எதிர்த்து நோய் எதிர்ப்பு திறன் உண்டாக உதவும்.

    இந்த முக்கிய காரணங்களுக்காக மட்டுமே ஒவ்வொரு இந்தியனையும் COVID 19 தடுப்பூசி பெற்று, COVID 19 நோயை விரட்டி அடிக்க விரும்புகிறோம். நாம் தடுப்பூசிகளை பற்றி அறிந்து ஒவ்வொரு குடிமகனும் அதனை பற்றி சரியான செய்தி பெற உதவ வேண்டும். சரியான தகவல் உடன், மகிழ்ச்சியான நோயில்லா இந்தியாவை உருவாக்கும் பாதையில் நாம் செல்லலாம். அது தான் Network18 சஞ்சீவினி - அ ஷாட் ஆப் லைஃப், இந்தியாவின் மாபெரும் தடுப்பூசி முகாமின் லட்சியம், இது Fedaral வங்கியின் CSR முயற்சி. இந்தியாவின் நலம் மற்றும் நோய் எதிர்ப்பு இயக்கத்தில் கலந்து கொண்டு COVID 19 தடுப்பூசி பற்றிய தகவலை அனைத்து இந்தியர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

     

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: