ஆக்சிஜன் தட்டுப்பாடு: ஹரியானா மருத்துவமனையில் 5 கொரோனா நோயாளிகள் பலி- மாநிலத்தில் 3வது முறையாக நிகழும் மரணங்கள்

ஆக்சிஜன் தட்டுப்பாடு: ஹரியானா மருத்துவமனையில் 5 கொரோனா நோயாளிகள் பலி- மாநிலத்தில் 3வது முறையாக நிகழும் மரணங்கள்

பிரதிநிதித்துவ படம்.

ஹரியாணா ஹிசார் மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் இல்லாமல் கொரோனா நோயாளிகள் 5 பேர் மரணமடைந்ததையடுத்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  • Share this:
    ஹரியாணா ஹிசார் மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் இல்லாமல் கொரோனா நோயாளிகள் 5 பேர் மரணமடைந்ததையடுத்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் 3வது சம்பவமாகும் இது. குர்கவானில் தனியார் மருத்துவமனை ஒன்றி ஞாயிறன்று 4 நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் மரணமடைந்துள்ளனர். இந்த இரண்டு மரணங்கள் குறித்து மாவட்ட மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    வெள்ளிக்கிழமையன்று டெல்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் 25 நோயாளிகள் மரணமடைந்தனர். ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க அரசு தரப்பில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஹரியானாவிலும் கோவிட் 19 நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 10,000த்திற்கும் அதிகமானோருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4.24 லட்சமாக உள்ளது.

    ஹரியாணா தலைமைச் செயலர் விஜய் வர்த்தன் அனைத்து உதவி ஆணையர்களுக்கும் அனுப்பிய உத்தரவில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை போதிய அளவு இருக்குமாறு உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதற்கிடையே குர்கவான் மருத்துவமனை 4 நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் இறக்கவில்லை, அவர்களுக்கு தீவிர கொரோனா தொற்று இருந்தது என்று கூறியுள்ளனர்.

    “இந்த நோயாளிகளுக்கு கொரோனா தொற்று தீவிரமாக இருந்தது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பது உண்மைதான் ஆனால் இந்த நோயாளிகள் 4 பேர் ஆக்சிஜன் இன்மையினால் இறக்கவில்லை.. தீவிர கொரோனா நோய் தாக்கியதால் அவர்களது ஆக்சிஜன் அளவு கிடுகிடுவென குறைந்தது. மருத்துவர்கள் அவர்களை உயிர்பிழைக்க வைக்க கடுமையாகப் போராடினார்கள் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் பிரிந்தது” என்று குர்கவான் மருத்துவமனை தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.

    இந்தியாவில் நேற்று 24 மணி நேரத்தில் 3.52 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, 2812 பேர் பலியாகியுள்ளனர்.

    இந்நிலையில் ஹரியானா ஹிசார் மாவட்டத்தில் 5 நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் மரணமடைய நேரிட்டது அங்கு துயரத்தை அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    நாடு முழுவதும் கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ராணுவ தளவாட நிறுவனங்கள் கோவிட் மருத்துவமனைகளை நிறுவி வருவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published: