5 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயார்- சீரம் நிறுவனம்

5 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயார்- சீரம் நிறுவனம்

covishield

2021 மார்ச் மாதத்திற்குள் 10 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாரிக்க திட்டமிட்டுப்பட்டுள்ளது.

  • Share this:
    இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இந்தியாவின் சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம் கொரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பு மருந்தை உருவாக்கி வந்தது.

    இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் அளிக்கக் கோரி, புனேவில் உள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையத்திற்கு விண்ணப்பித்துள்ளது.

    இது குறித்து அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகையில்,“நாங்கள் 4 முதல் 5 கோடி மருந்துகளை தயாரித்துள்ளோம். ஆரம்பகட்டத்தில் தடுப்பூசியை வெளியிடுவது, வினியோகிக்கும் பணிகள் மந்தமாகவே நடைபெறும். விரைவில் அவை முறைப்படுத்தப்பட்டுவிடும்” என்று கூறினார்.

    மேலும். அடுத்த மார்ச் மாதத்திற்குள் 10 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாரிக்க திட்டமிட்டுப்பட்டு இருக்கின்றது என்றும், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு விரைவில் இங்கிலாந்தில் ஒப்புதல் கிடைத்துவிடும், இந்தியாவிலும் அடுத்த மாதத்தில் அங்கீகாரம் கிடைத்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published: