கொரோனா சிகிச்சைக்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் - இந்திய ரயில்வே அறிவிப்பு

கொரோனா சிகிச்சைக்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் - இந்திய ரயில்வே அறிவிப்பு

ரயில் பெட்டியில் கொரோனா சிகிச்சை

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை படுக்கைகள் நிரம்பி வருவதால், 4,002 ரயில் பெட்டிகள், சிகிச்சைக்காக தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

 • Share this:
  இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை படுக்கைகள் நிரம்பி வருவதால், 4,002 ரயில் பெட்டிகள், சிகிச்சைக்காக தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 2.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,77,150 ஆக உயர்ந்துள்ளது.

  நாடு முழுவரும் கொரோனா 2ஆவது அலை வேகமெடுத்துள்ளதால், பெரும்பாலான மாநிலங்களின் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

  இந்நிலையில், கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 4,002 ரெயில் பெட்டிகள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இது, தொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இதுவரை 4,002 பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 16 மண்டலங்களில் இந்த பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

  மேலும் மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப பெட்டிகள் வழங்கப்படும். இந்த ரயில் பெட்டிகளால் சந்தேகப்படும் கொரோனா நோயாளிகள் மற்றும் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்கும் வசதிகள் அதிகரிக்கும்” இவ்வாறு தெரிவித்துள்ளது.

  Must Read : அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜனை விநியோகம் செய்ய மத்திய அரசு தடை.. மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தடுக்க நடவடிக்கை..

   

  இந்நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க நாடு முழுவதற்கும் பிரத்யேக ஆக்சிஜன் ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: