கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்கள் அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்கள் அறிவிப்பு

தடுப்பூசி

அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் அறிவித்துள்ளன.

 • Share this:
  அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் அறிவித்துள்ளன.

  நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2 ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

  அந்த வகையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என தமிழம் உள்ளிட்ட சில மாநிலங்கள் அறிவித்துள்ளன. டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒருவார காலம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

  இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

  Must Read :  கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியீடு... தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளோருக்கு 100 சதவீதம் பலனளிப்பதாக தகவல்

   

  அதன்படி, மே 1 ஆம் தேதி முதல் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளா, சத்தீஷ்கர், மத்திய பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய 4 மாநிலங்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அறிவித்துள்ளன.
  Published by:Suresh V
  First published: