கொரோனா பரவலின் நான்கு கட்டங்கள் என்னென்ன? இந்தியா எந்தக் கட்டத்தில் உள்ளது?

சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் நான்காம் கட்டத்தில் உள்ளன.

கொரோனா பரவலின் நான்கு கட்டங்கள் என்னென்ன? இந்தியா எந்தக் கட்டத்தில் உள்ளது?
மாதிரிப்படம்
  • Share this:
கொரோனா வைரஸ் பரவும் விதத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நான்கு கட்டங்களாக வகைப்படுத்தியுள்ளது. அந்த நான்கு கட்டங்கள் என்னென்ன, இந்தியா தற்போது எந்த கட்டத்தில் உள்ளது?

உலக மக்களின் மீது எந்த விதமான வேறுபாடும் இன்றி தன் தாக்குதலைத் தொடர்ந்து வரும் கொரோனா இந்தியாவிலும் தன் தடத்தைத் பதித்திருக்கிறது. தற்போது வரை இந்தியாவில் 873 பேர் கொரோனா தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 19 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கொரோனா பரவும் விதத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நான்கு கட்டங்களாக வகைப்படுத்தியுள்ளது.

முதல் கட்டம் - இறக்குமதி பரவல் எனப்படுகிறது. அதாவது கொரோனா பாதித்த வெளிநாடுகளில் இருந்து இங்கு வருவோருக்கு கொரோனோ வைரஸ் தொற்று கண்டறியப்படுவது முதல் கட்டமாக அறியப்படுகிறது.


இரண்டாம் கட்டம் - உள்நாட்டு பரவல் எனப்படுகிறது. வெளியில் இருந்து வந்த நபர்களின் மூலமாக உள்நாட்டில் நோய் பரவுவது இரண்டாம் கட்டமாக பார்க்கப்படுகிறது.

மூன்றாம் கட்டம் - சமூகப் பரவல் எனப்படுகிறது. உள்நாட்டிற்குள் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவுவது மூன்றாம் கட்டமாக அறியப்படுகிறது.

நான்காம் கட்டம் - தொற்றுநோய் பரவல் எனப்படுகிறது. எங்கு எவர் மூலமகப் பரவியது என அறிய முடியாத அளவிற்கு உள்நாட்டிற்குள் அதீத அளவில் தீவிரமாகப் பரவுவது கொரோனா பரவலின் அபாய கட்டமான நான்காவது கட்டமாகும்.Also read: கொரோனாவை எதிர்கொள்ள கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைந்து போராட வேண்டும் - மு.க. ஸ்டாலின்

இதில் சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் நான்காம் கட்டத்தில் உள்ளன. அங்கு தொற்றுநோய் பரவல் ஆயிரக்கணக்கானோரை பலி கொண்டிருக்கிறது.

கொரோனா பரவலில் இந்தியா தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களிடம் கொரோனா பதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடர்புடைய உள்நாட்டு நபர்களுக்கும் தற்போது நோய் பரவியுள்ளது.

நாட்டின் எல்லைகளை மூடுதல், கண்காணிப்பை தீவிரப்படுத்துதல், நோய் அறிகுறி கண்டவர்கள் அனைவரையும் சோதித்து பாதிப்பு உள்ளதா என கண்டறிதல் என நடவடிக்கைகளை முடுக்கி விடுவதன் மூலம் இந்தியா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவதை தவிர்க்க முடியும்.

அதேபோல, அவசியமற்ற பயணங்களை தவிர்த்தல், கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து மேற்கொள்ளுதல் , கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், கிருமிநாசினி தெளித்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் கொரோனா அடுத்த கட்டத்திற்கு முன்னேறாமல் தவிர்க்க முடியும்.

Also see:
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading