ஹோம் /நியூஸ் /கொரோனா /

கடலூரில் கரும்பு & வாழைத்தோப்பில் கள்ளச் சாராயம் காய்ச்சிய 4 பேர் கைது!

கடலூரில் கரும்பு & வாழைத்தோப்பில் கள்ளச் சாராயம் காய்ச்சிய 4 பேர் கைது!

இன்று காலை டிஎஸ்பி சாந்தி அதிரடியாக  வாழைத்தோப்பில் சோதனை மேற்கொண்டபோது கள்ளசாராயம் ஊரல் போட்ட 150 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஊரடங்கு உத்தரவால் கடலூரில் மது பிரியர்கள் கரும்பு மற்றும் வாழைத்தோப்பில் கள்ளச் சாராயம் காய்ச்சி வருகின்றனர். இதனை அறிந்த கடலூர் டிஎஸ்பி அதிரடி சோதனை மேற்கொண்டார். அதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து மது கடைகள் முழுமையாக மூடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் அதிகளவு  கிராமப்பகுதிகளில் கள்ளசாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் மெத்தனால் குடித்து 3 பேர் உயிர் இழந்த நிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீஅபிநவ் மாவட்டம் முழுவதும்  சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கடலூர் அடுத்த எஸ்புதூர் கிராமத்தில் கள்ளத்தனமாக கரும்பு மற்றும் வாழைத்தோப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சி தொலைபேசி மூலம் விற்பனை செய்யப்படுவதாக கடலூர் துணைகாவல் கண்காணிப்பாளர் சாந்தி அவர்களுக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை டிஎஸ்பி சாந்தி அதிரடியாக  வாழைத்தோப்பில் சோதனை மேற்கொண்டபோது கள்ளசாராயம் ஊரல் போட்ட 150 லிட்டர் சாராயம் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

இதில் ஈடுபட்டிருந்த பழனி மகன் தனசேகர் வயது 48 கோவிந்தராஜ் மகன் தனசேகர் வயது 36 சக்திவேல் வயது 41 சிவமணி 33 ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிவகுமார் அருண் ராம் குமார் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Also see...

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus, Cuddalore