நாகையில் 4 மருத்துவர்கள், ஒரு செவிலியருக்கு கொரோனோ பாதிப்பு -மருத்துவத்துறை பணியாளர்கள் அச்சம்

நாகையில் 4 மருத்துவர்கள், ஒரு செவிலியருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகையில் 4 மருத்துவர்கள், ஒரு செவிலியருக்கு கொரோனோ பாதிப்பு -மருத்துவத்துறை பணியாளர்கள் அச்சம்
நாகை அரசு மருத்துவமனை.
  • Share this:
நாகை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து அதிகமான நபர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதால் நாகை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், இன்று ஒரே நாளில் 16 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்த இரண்டு மருத்துவர்கள், திருவெண்காடு பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர், நாகையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் என நான்கு மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also see:தொடர்ந்து நாகை அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். நாகை மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 250ஆக உயர்ந்துள்ளது.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading