உ.பி-யில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க 377 தொழிற்சாலைகள் இயங்குகின்றன - யோகி ஆதித்யநாத் தெரிவிப்பு

யோகி ஆதித்யநாத்

ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க, தற்போது மாநிலம் முழுவதிலும் 377 தொழிற்சாலைகள் இயங்குகின்றன என்றார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

 • Share this:
  அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் கொரோனாவுக்கு 18 பேராசிரியர்கள் மரணமடைந்ததையடுத்து அலிகர் பல்கலைக் கழகத்துக்கு வருகை தந்தார் யோகி ஆதித்யநாத்.

  அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைந்துள்ள சிவில் லைன் பகுதியில் புதுவகைவைரஸ் பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது.
  இங்கு கரோனாவால் பாதித்தவர் களின் மாதிரிகள் மத்திய அரசின் ஐசிஎம்ஆர் நிறுவனத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  இந்நிலையில், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், நேற்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பல்கலை. வளாகத்திலுள்ள ஜவகர்லால் நேரு மருத்துவமனை அரங்கத்தில் மருத்துவ பேராசிரியர் களுடன் ஆலோசனை நடத்தினார்.

  இதுகுறித்து செய்தியாளர் களிடம் பேசிய முதல்வர் யோகி கூறும்போது, ‘‘அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு கரோனா சிகிச்சையில் தேவையான அனைத்து உதவிகளும் செய்ய அரசு தயாராக உள்ளது. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க, தற்போது மாநிலம் முழுவதிலும் 377 தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

  330 டன்னாக இருந்த ஆக்ஸிஜன் தேவை ஆயிரமாக உயர்ந்துவிட்டது. இதை சமாளிக்க 1,030 டன்ஆக்ஸிஜன் விநியோகித்து வருகிறோம். பிரதமர் நிதி உதவிதிட்டத்திலும் 161 ஆக்ஸிஜன் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. உ.பி. யில் கடந்த 12 தினங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்து ஆறாயிரமாக குறைந்துள்ளது. எனினும், கரோனாவிற்கான பரிசோதனை யும், சிகிச்சையும் மாநிலம் முழுவதும் தொடர்கிறது’’ என்றார்.

  ‘உ.பி.யில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக இதுவரை ஒரு கோடியே 43 லட்சம் தடுப்பூசிகள் போடப் பட்டிருப்பதாக’’ தெரிவித்தார். குழந்தைகளுக்காக தனி கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கவும் உ.பி . அரசு ஏற்பாடு செய்வதாக முதல்வர் யோகி தெரிவித்தார்.

  உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19,425 பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்றியுள்ளது. 277 பேர் மரணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 16,646 ஆக அதிகரித்துள்ளது.
  Published by:Muthukumar
  First published: