கடலூரில் இரண்டு சார்பு நீதிபதிகள் உட்பட 35 நீதிமன்ற ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நீதிபதிகள் உட்பட 35 நீதிமன்ற ஊழியர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். நீதிமன்றத்திற்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

கடலூரில் இரண்டு சார்பு நீதிபதிகள் உட்பட 35 நீதிமன்ற ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..
கடலூர் நீதிமன்ற வளாகம்
  • Share this:
கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களும் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 3,083 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்  இதுவரை 1,019 பேர் தனிமைப்படுத்தப்பட்ட கடலூர் சிதம்பரம் விருத்தாசலம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்த நிலையில் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளுக்கும், ஊழியர்களுக்கு  கடந்த 27-ஆம் தேதி கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இன்று காலை முடிவுகள் வெளியானதில் இரண்டு சார்பு நீதிபதிகள்  உட்பட 35 நீதிமன்ற ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதில் 17 பேர் பெண் ஊழியர்கள் தற்போது இவர்கள் அனைவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது தகவல் கொடுக்கப்பட்டு  அனைவரும் அவர்களது வீட்டில் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர். மேலும்  இரண்டு நீதிபதிகளும் அவர்களது வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டுள்ளனர். மேலும் படிக்க...#BREAKING | இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் பிரதமர் மோடி

இருப்பினும் அனைவரது வீட்டிலும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும், வீட்டில் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் ஏற்ப்பட்ட கொரோனா தொற்றால் தற்போது நீதிமன்றம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
First published: August 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading