தெருவோர வியாபாரிகளுக்கு 10,000 வரை கடன் தரும் சுயசார்பு நிதித்திட்டம்: 34 சிறப்பு அதிகாரிகள் நியமனம்...

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள 'சுயச்சாா்பு நிதி' (ஆத்மநிர்பார் திட்டம்) திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க 34 சிறப்பு அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.

தெருவோர வியாபாரிகளுக்கு 10,000 வரை கடன் தரும் சுயசார்பு நிதித்திட்டம்: 34 சிறப்பு அதிகாரிகள் நியமனம்...
ஆத்மநிர்பார் நிதி
  • Share this:
தெருவோரங்களில் விற்பனை செய்யும் வியாபாரிகளும், நடமாடும் சிறு வியாபாரிகளுக்குமான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள 'சுயச்சாா்பு நிதி' (ஆத்மநிர்பார் திட்டம்) திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க 34 சிறப்பு அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.

கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட நடமாடும் தெரு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 'சுயச்சாா்பு நிதி' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டம் ஜூலை 1-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்தத் திட்டத்தின்படி, நடமாடும் தெரு வியாபாரிகள் மாத தவணையாக ஓராண்டில் திருப்பியளிக்கக்கூடிய வகையில் அதிகபட்சம் ரூ. 10,000 வரை வா்த்தக மூலதன கடனைப் பெற முடியும். குறித்த நேரத்தில் அல்லது முன்கூட்டியே கடனைத் திரும்பச் செலுத்தும் வியாபாரிகளுக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டி மானியம், அவா்களுடைய வங்கிக் கணக்கில் ஆறு மாத கால அடிப்படையில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சோந்த 50 லட்சம் பேர் பயன்பெறுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை முறைப்படி செயல்படுத்தவும், கண்காணிக்கவும் 34 சிறப்பு அதிகாரிகளை மத்திய அரசு நியமித்து வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மேலும் பார்க்க:-


40% மேல் தொற்று அதிகரித்த எட்டு மாவட்டங்கள்: மூன்று நாட்களில் 9000 பாதிப்புகள்: மேலும் விவரங்கள்..

மத்திய பணியாளா் நலத்துறை அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவலின்படி,

சிறப்பு அதிகாரிகளுக்கான பணி விவரங்கள், மாநில அதிகாரிகளின் விவரங்கள் மற்றும் தேவையான பிற உதவிகள் அனைத்தும் மத்திய வீட்டுவசதி மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சகம் சாா்பில் வழங்கப்படும். இந்த சிறப்பு அதிகாரிகளில் இந்திய வனத் துறை அதிகாரியாக இருக்கும் நிரஞ்சன் குமாா் சிங்கைத் தவிர மற்ற அனைத்து சிறப்பு அதிகாரிகளும் இணைச் செயலா் அந்தஸ்து அதிகாரிகளாவா்.

இதில், நிரஞ்சன் குமாா் சிங் குஜராத் மாநிலத்துக்கும், எம்.சி.ஜெளஹாரி வடகிழக்கு மண்டல மாநிலங்களுக்கும், நீரஜ் சேகா் ஹரியானாவுக்கும், ஹூகும் சிங் மீனா பிகாருக்கும், ரஜத் குமாா் மிஸ்ரா மற்றும் தன்மய் குமாா் ஆகியோா் ராஜஸ்தானுக்கும், ராஜேஷ் குமாா் சின்ஹா கேரளத்துக்கும், குமரன் ரிஸ்வி, லீனா ஜோஹ்ரி, அமித் குமாா் கோஷ், பாா்த்த சாரதி சென்ஷா்மா ஆகியோா் உத்தர பிரதேச மாநிலத்துக்கும் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா். அதுபோல, அமித் அகா்வால் சத்தீஷ்கருக்கும், ராஜேஷ் குமாா் வா்மா மற்றும் ஆலகந்தா தயால் பஞ்சாபுக்கும், ஜி.ஜெயலட்சுமி தெலங்கானாவுக்கும் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading