தமிழகத்தில் இதுவரை 31 எம்.எல்.ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை 4 அமைச்சர்கள் உட்பட மொத்தம் 31 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 31 எம்.எல்.ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு
(கோப்புப் படம்)
  • Share this:
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மின்சாரத்துறை தங்கமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகினர்.

மேலும், அதிமுகவைச் சேர்ந்த பரமக்குடி தொகுதி சதன் பிரபாகர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பழனி, உளுந்தூர்பேட்டை குமரகுரு, கோவை தெற்கு தொகுதி அம்மன் அர்ச்சுனன் உட்பட அதிமுகவில் 14 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணனுக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

Also read: புதுச்சேரியில் இன்று 245 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - மேலும் ஒரு அமைச்சர் பாதிப்பு


அதேபோல், திமுகவைச் சேர்ந்த திட்டக்குடி எம்.எல்.ஏ கணேசன், செஞ்சி மஸ்தான், ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்ட 14 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று புதிதாக குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் ராமருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுகவில் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 31 சட்டமன்ற உறுப்பினர்களில், பெரும்பாலானோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
First published: August 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading