• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • Corona Update | தமிழகத்தில் கொரோனாவால் ஒரேநாளில் 30,016 பேர் பாதிப்பு; 486 பேர் உயிரிழப்பு!

Corona Update | தமிழகத்தில் கொரோனாவால் ஒரேநாளில் 30,016 பேர் பாதிப்பு; 486 பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று மட்டும் கோயம்புத்தூரில் 3,692 பேருக்கும், சென்னையில் 2,705 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30,016 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 486 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபோதிலும், தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இந்தநிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையின்படி, ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,63,763 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 30,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 20,39,716ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 31,759 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 17,06,298 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    தற்போது, கொரோனா பாதிப்பால் வீட்டு தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 3,10,157-ஆக இருந்து வருகிறது. கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 486 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 23,261 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று மட்டும் கோயம்புத்தூரில் 3,692 பேருக்கும், சென்னையில் 2,705 பேருக்கும், ஈரோட்டில் 1,743 பேருக்கும், செங்கல்பட்டில் 1,314 பேருக்கும், திருவள்ளூரில் 1072 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: