கோவில்பட்டி குடோனில் நவதானியங்கள் தேக்கம்: 300 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு..!

கோவில்பட்டி குடோனில் நவதானியங்கள் தேக்கம்: 300 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு..!

கோவில்பட்டியில் நவதானியங்கள் குடோனில் தேக்கம்

கோழி தீவனங்களுக்கு அதிகளவு பயன்படும் மக்காச்சோளம், வெள்ளைச்சோளங்களை கோழிப்பண்ணை உரிமையாளர்கள் வாங்குவதில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.

  • Share this:
    கொரோனா எதிரொலியாக கோவில்பட்டி பகுதியில் நவதானியங்கள் குடோனில் தேக்கமடைந்துள்ளதால் 300 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    தமிழகத்தில் அதிகளவு நவதானியங்கள் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. உளுந்து, பாசிப்பயிறு, பருத்தி, கம்பு, மக்காச்சோளம் என இங்கு பயிரிடப்படும் நவதானியங்கள் கேரளா, ஆந்திரா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.

    கோவில்பட்டியில் நவதானியங்கள் குடோனில் தேக்கம்


    நடப்பாண்டு அறுவடை செய்த நவதானியங்கள் விற்பனை செய்யப்பட வேண்டி இருந்த நேரத்தில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சுமார் 10 லட்சம் டன் நவதானிய மூட்டைகள் தேக்கம் அடைந்தன. வியாபாரிகளும் குறைந்த விலைக்கு நவதானியங்களை கேட்பதால் கடும் நஷ்டம் அடைந்துள்ள விவசாயிகள், சுமார் 300 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

    கேரளாவில் பறவைக்காய்ச்சல் பீதியால் கோழி தீவனங்களுக்கு அதிகளவு பயன்படும் மக்காச்சோளம், வெள்ளைச்சோளங்களை கோழிப்பண்ணை உரிமையாளர்கள் வாங்குவதில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.

    Also see...











    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Vaijayanthi S
    First published: