• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • புதுச்சேரியில் ஒரு நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று - அமைச்சர் தகவல்

புதுச்சேரியில் ஒரு நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று - அமைச்சர் தகவல்

சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

புதுச்சேரியில் இதுவரை இல்லாத வகையில் ஒரு நாளில் 30 பேர் கொரோனா நோய் தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • Share this:
புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி 216 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று மட்டும் மேலும் 30 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 246 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 80 வயது முதியவர் நேற்று இறந்தார். இதனால்  புதுச்சேரியில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் யார் யாரை சந்தித்துள்ளன,ர் என்பதன் விவரங்களை பொது மக்களிடமிருந்து கண்டறிவது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களிடமிருந்து சரியான ஒத்துழைப்பு இல்லை. சரியான விவரங்கள் பெறப்படாமல் உள்ளது. நோயின் ஆபத்தை உணராமல் மக்கள் நடமாடுவதாகவும் கொரோனா அச்சத்திலிருந்து பொதுமக்கள் விலகிவிட்டனர். இது மிகவும் ஆபத்தானது.  தேவையின்றி பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம். இன்று ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மிகப்பெரிய அச்சமாகும் என்றும்  அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

பேட்டியின் போது உடனிருந்த சுகாதார துறை இயக்குனர் மோகன்குமார் பேசுகையில், புதுச்சேரியில் இதுவரை 14 ஜிப்மர் மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் குணமடைந்து விட்டனர். 7 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றும் இதுவரை 122 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டது. இதில் 43 விலகப்பட்டு தற்போது 79 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

Also read... எல்லைகளை மூடியது புதுச்சேரி! இ-பாஸ் இருந்தாலும் தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: