• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா தடுப்பூசி திருவிழா: முதல் நாளில் 30 லட்சம் டோஸ்கள் போடப்பட்டதாக தகவல்

கொரோனா தடுப்பூசி திருவிழா: முதல் நாளில் 30 லட்சம் டோஸ்கள் போடப்பட்டதாக தகவல்

மாதிரி படம்

மாதிரி படம்

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் 29,33,418 லட்சம் கொரேனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டதாகவும், இதன் மூலம் இதுவரையில் செலுத்தப்பட்டுள்ள மொத்த டோஸ்களின் எண்ணிக்கை 10.45 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் 29,33,418 லட்சம் கொரேனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டதாகவும், இதன் மூலம் இதுவரையில் செலுத்தப்பட்டுள்ள மொத்த டோஸ்களின் எண்ணிக்கை 10.45 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேகமாக பரவி வரும் கொரோனாவின் 2 ஆவது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணிகளையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    2021 ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. இந்நிலையில் இந்த பணிகளை வேகப்படுத்துவதற்காக நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழாவை அனுசரிக்க பிரதமர் நரேநதிர மோடி சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார். தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை இந்த திருவிழாவை கடைப்பிடிக்க அறிவுறுத்தினார்.

    இந்நிலையில், நாடு முழுவதும் நேற்றுமுன்தினம் முதல் தடுப்பூசி திருவிழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    அந்தவகையில் நாடு முழுவதும் 63,800 தடுப்பூசி மையங்களில் இந்த தடுப்பூசி திருவிழா கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த திருவிழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் சுமார் 30 லட்சம் (29,33,418) தடுப்பூசி டோஸ்கள் நாடு முழுவதும் போடப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதில் 27,1439 பயனாளர்கள் தங்கள் முதல் டோஸ் தடுப்பூசியையும், 2,31, 979 பயனாளர்கள் 2ஆவது டோஸ் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டுள்ளனர். விடுமுறை தினத்திலும், தடுப்பூசி திருவிழாவில் அதிக அளவில் இந்த முகாம்களில் மக்கள் பங்கேற்று தடுப்பூசி போட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால், இந்தியாவில் இதுவரை போடப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 10.45 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதில் 60.13 சதவீத தடுப்பூசி டோஸ்கள் 8 மாநிலங்களில் போடப்பட்டவை என்பது குறிப்பிடவை.

    Must Read : நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி

     

    இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: