புதுச்சேரியில் ஒரே கிராமத்தில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுச்சேரியில் ஒரே கிராமத்தில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பாதிக்கப்பட்ட கிராமங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்.

புதுச்சேரி கிராமப் பகுதியான கூனிச்சம்பட்டில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு காவல்துறையின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது.

  • Share this:
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கூனிச்சம்பட்டு கிராமத்தில் 30-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களோடு தொடர்பில் இருந்த 80க்கும் மேற்பட்டோர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

அப்பகுதியைத் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அங்கு உள்ளவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. மேலும், அப்பகுதியை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Also see:இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் ரங்கநாதன் கூறுகையில், மாஸ்க் தொழிற்சாலையில் பணிபுரிந்த 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பணிபுரிந்தவர்கள் கூனிச்சம்பட்டு, திருக்கனூர், மணலிப்பட்டு, செட்டிப்பட்டி, காட்டேரிக்குப்பம், செல்லிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.

மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியிலிருந்து யாரும் வெளியில் வராமலும் வெளியிலிருந்து அப்பகுதிக்குள் செல்லாமலும் போலீசார் தடுப்பு ஏற்படுத்தி கண்காணித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
Published by:Rizwan
First published: