அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்: சிகிச்சை அளிக்க சென்னையில் மீண்டும் 3 அடுக்கு படுக்கைகள்...

அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்: சிகிச்சை அளிக்க சென்னையில் மீண்டும் 3 அடுக்கு படுக்கைகள்...

கொரோனா

சென்னை அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் வேகமாக நிரம்பி வருவதால், கடந்த ஆண்டைப் போல மீண்டும் மூன்றடுக்கு படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள நிலையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் தினந்தோறும் பாதிப்பு உச்சம்தொட்டு வருகிறது. இதனால் தொற்று பாதித்து சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை, 14,000ஐ கடந்துள்ளது. அதில், லேசான அறிகுறிகளை மட்டும் கொண்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்ட்டுள்ளனர். நேரடி மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுபவர்கள், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

  இதனால், சென்னையில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள 575 படுக்கைகளில் 530 படுக்கைகளும், கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் உள்ள 500 படுக்கைகளில் 475 படுக்கைகளும் நிரம்பியுள்ளன. இதேபோல் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

  இதன் காரணமாக, நோயாளிகளுக்கான படுக்கைகள் பற்றாக்குறையைப் போக்க, கடந்தாண்டை போலவே சென்னையில் மீண்டும் மூன்றடுக்கு படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது தொடர் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு பெரிய மருத்துவமனைகளிலும், சற்று திடமான நோயாளிகளுக்கு சிறிய மருத்துவமனைகளிலும், அறிகுறிகள் இல்லாமல் தொற்று உறுதியான இளவயதினருக்கு கல்லூரி வளாகங்களிலும், படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

  மேலும் படிக்க... வேகமெடுக்கும் கொரோனா: ரெம்டெசிவர் மருந்தை ஏற்றுமதி செய்ய தடை...

  அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலை விடுதி, அம்பேத்கர் கலைக்கல்லூரி, ஐஐடி மெட்ராஸ் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில், கொரோனா நோயாளிகளுக்காக 11775 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர கே.கே நகர் , தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சிறிய மருத்துவமனைகளில் சுமார் இரண்டாயிரம் படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: