தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று... பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29 ஆக உயர்வு...!

திருச்சியை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று... பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29 ஆக உயர்வு...!
கோப்பு படம்
  • Share this:
தமிழகத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் நால்வர் இந்தோனேசியாவில் இருந்து வந்தவர்கள் ஆவர். மற்றவர் அவருடைய சுற்றுலா வழிகாட்டியாக செயல்பட்டவர்.

இந்நிலையில் நேற்றிரவு புதிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக சுகாதாரத் துறை, ரயிலில் சென்னைக்கு வந்த கொரோனா பாதித்த வடமாநில நபருடன் தொடர்பில் இருந்த 18 வயது இளைஞருக்கும், துபாயில் இருந்து திரும்பிய 63 வயது முதியவருக்கும், தாய்லாந்தில் இருந்து வந்தவருடன் தொடர்புடைய தமிழக நபருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தது.


இந்த சூழலில் இன்று திருச்சியை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர் துபாயில் இருந்து வந்த விமானம் மூலம் திருச்சி திரும்பியவர் என்று கூறப்படுகிறது. இதனிடையே மேலும் இருவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்