கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு!

கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு!
கோப்புப்படம்
  • Share this:
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழப்பு பெருமளவில் அதிகரித்து வருகிறது. இதில் தமிழ்நாட்டில் சுமார் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 66 வயது மீனவர் உயிரிழந்தார். இவர் ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த மரிய ஜான் ஆவார்.

இவர் சளியை ரத்த மாதிரியில் பரிசோதனை செய்த போது கொரோனா இல்லை என உறுதியாகி உள்ளது. இவரை தொடர்ந்து இன்று முட்டம் பகுதியை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை மற்றும் திருவட்டர் பகுதியை சேர்ந்த 24 வயது  ராஜேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களின் பரிசோதனை முடிவுகளும் இன்னும் வரவில்லை என கூறப்படுகிறது.


Also see...இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading