Covid vaccine : 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மும்பையில் இருந்து சென்னை வந்தன

Covid vaccine : 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மும்பையில் இருந்து சென்னை வந்தன

கோவிஷீல்டு தடுப்பூசி

மும்பையில் இருந்து சென்னைக்கு வரும் ஸ்பைஜெட் ஏா்லைன்ஸ் விமான மூலம் 30 ஆயிரம் பாட்டில்களில் 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்து சென்னை வந்தடைந்தது.

  • Share this:
    நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கே தற்போது கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மே 1 ஆம் தேதி முதல் 18-ல் இருந்து 44 வயது நிரம்பியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. அதற்காக, கோவின், ஆரோக்ய சேது மற்றும் உமாங் ஆகிய செயலிகள் மூலம் நேற்று மாலை 4 மணிக்கு முன்பதிவு தொடங்கியது.

    முன் பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே, சுமார் 1 கோடியே 33 லட்சம் பேர் முன்பதிவு செய்ததாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்பட 6 மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மே 15ஆம் தேதிக்கு பிறகே தடுப்பூசிகளை வழங்க முடியும் என சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதால் திட்டமிட்டபடி மே 1ஆம் தடுப்பூசி போடும் பணி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “சென்னையில், தடுப்பூசி போடுவதற்காக ராஜிவ்காந்தி, ஓமாந்தூரார் மருத்துவமனைகளுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். சென்னையில் 380 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதனால் வீட்டுக்கு அருகாமையில் சென்று போட்டுக்கொள்ளவும். இதனால் தடுப்பூசி போட வருபவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவது குறையும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

    Must Read : புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை மைய முகவர்கள் 80க்கும் மேற்பட்டேருக்கு கொரோனா தொற்று

     

    இந்நிலையல், மும்பையில் ஸ்பைஜெட் ஏா்லைன்ஸ் விமான மூலம் 30 ஆயிரம் பாட்டில்களில் 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்து சென்னை வந்தடைந்தது. அங்கிருந்து அவை பாதுகாப்பாக டிஎம்எஸ் வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
    Published by:Suresh V
    First published: