ஹோம் /நியூஸ் /கொரோனா /

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று? : வீட்டில் இருந்தே வழக்குகளை விசாரிக்குமாறு தலைமை பதிவாளர் அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று? : வீட்டில் இருந்தே வழக்குகளை விசாரிக்குமாறு தலைமை பதிவாளர் அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக செய்திகள் பரவிய நிலையில், இனி நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்தே வழக்குகளை விசாரிப்பார்கள் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகளை நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்தே வீடியோ கான்ப்ரென்ஸ் மூலமாக விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 1 ஆம் தேதி முதல் நீதிபதிகள் தங்கள் நீதிமன்ற அறைகளுக்கு வந்து வழக்குகளை வீடியோ கான்ப்பெரன்ஸ் மூலம் விசாரித்து வருகின்றன.

இந்நிலையில், வழக்குகளை விசாரித்து வந்த 3 நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாய ஊழியர் ஒருவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக செய்திகள் வெளியானது.

இந்த சூழலில், சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு தீர்மானத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இனி இரு நீதிபதிகள் கொண்ட இரண்டு அமர்வுகளும், 4 தனி நீதிபதிகளும் மட்டுமே தங்கள் வீடுகளில் இருந்தே வீடியோ கான்ப்பென்ஸ் மூலமாக அவசர வழக்குகளை விசாரிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் தங்கள் வழக்குகளை வீடியோ கான்ப்ரென்ஸ் மூலமாக அல்லாமல் நேரடியாக ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் என வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சில் வலியுறுத்தி வரும் நிலையில், தலைமை பதிவாளரின் இந்த அறிவிப்பு வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க...

ஒரு உயிரிழப்பு கூட இல்லை - கொரோனாவில் இருந்து 100 % விடுதலை அடைந்த குட்டித்தீவு நாடு


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai High court, Judge