CoronaVirus : குறையும் தொற்று... இந்தியாவில் ஒரே நாளில் 3.69 லட்சம்பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர்

கொரோனா பரவல்

நாடு முழுவதும் ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 3,69,077 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் தொற்றும் உயிரிழப்பும் குறைந்து வருவது மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

  • Share this:
    நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 2,76,110 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாள்தோறும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் 3,874 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,87,122 ஆக உயர்ந்துள்ளது.

    ஒரே நாளில் 2,76,110 பேர் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதுவரை நாட்டில் 2,57,72, 400 பேரை கொரோனா வைரஸால் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரையில் குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2,23,55,440 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 31,29, 878 ஆக இருப்பதா தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுவரை 18,70,09,792 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

    Must Read : மதுரையில் 50 பேருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு உறுதி என தகவல்!

     

    இந்தியாவில் இதுவரை 32,23,56,187 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 20,55,010 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
    Published by:Suresh V
    First published: